உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கட்டிங் தர மறுத்தவருக்கு குத்து

கட்டிங் தர மறுத்தவருக்கு குத்து

சின்னசேலம் : சின்னசேலத்தில் கட்டிங் தர மறுத்தவரை பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ், 53; இவர் கடந்த 25ம் தேதி மாலை 6:30 மணியளவில் நைனார்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றார்.அப்போது சின்னசேலம் தண்டகார தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், 45; காந்தி நகர், கருப்பையன், 59; ஆகியோர் தேவராஜிடம் மது பாட்டில் வாங்க பணம் கேட்டனர்.தேவராஜ் பணம் தர மறுத்ததால் மதுவில் 'கட்டிங்' கேட்டு தகராறு செய்து, மேலும் இருவரும் சேர்ந்து குவாட்டர் பாட்டிலால் தேவராஜின் தோள் பட்டையில் குத்தினர்.இது குறித்த புகாரின்பேரில், செல்வராஜ், கருப்பையன் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ