மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆய்வு
23-May-2025
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.ரிஷிவந்தியம் அடுத்த பழையசிறுவங்கூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 6.77 லட்சம் ரூபாய் மதிபில் புதிதாக கல்வெர்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெர்ட்டை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, மேலப்பழங்கூரில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நாற்றங்கால் உற்பத்தி பண்ணை பணிகள், அவிரியூரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 சார்பில் கட்டப்பட்ட தானிய உலர் களம், துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.மேலும், எகால், அரியலுார், இளையனார்குப்பம் கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் தரம் குறித்து அளவீடு செய்தார்.ஆதனுார் - சுத்தமலை வரை 1.32 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் பள்ளம் தோண்டி, சாலையின் தரம் மற்றும் அளவுகள் குறித்து ஆய்வு செய்தார். பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
23-May-2025