உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு வானவில் மன்ற போட்டி

மாணவர்களுக்கு வானவில் மன்ற போட்டி

திருக்கோவிலுார் ; கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், திருக்கோவிலுார் வட்டார வள மையத்தில், வட்டார அளவிலான, வானவில் மன்ற போட்டிகள் நடந்தது. இதில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 90 மாணவர்கள் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியல், கணித அணுகு முறைகள் என்ற தலைப்பில் காட்சி பொருட்கள், ஆய்வு கட்டுரைகள், இயங்கும் மாதிரிகளை காட்சிப்படுத்தினர். வட்டார கல்வி அலுவலர்கள் முரளிகிருஷ்ணன், கஜேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் முன்னிலையில் நடந்த இப் போட்டிக்கு, ஆசிரியர்கள் வில்வபதி, ஜெயந்தி நடுவர்களாக செயல்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களை தேர்வு செய்தனர்.மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவர். ஆசிரியர் பயிற்றுநர்கள் சரளா, ரோசாலி பாய், விஜயகுமார், கலியபெருமாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். வானவில் மன்ற ஒருங்கிணைப்பு குழு குமரேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ