மேலும் செய்திகள்
சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு
18-Apr-2025
மின் மோட்டார் திருட்டு
15-May-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில், பாவளம் செல்லும் சாலையில், 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.நேற்று மாலை இப்பகுதியில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்து துணிகள், பொருட்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இரவு 7:00 மணிக்கு, அரசம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், 45 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18-Apr-2025
15-May-2025