உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்காச்சோளம் பயிரில் மழைநீர் தேக்கம்

மக்காச்சோளம் பயிரில் மழைநீர் தேக்கம்

தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் கன மழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தியாகதுருகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. கொங்கராயபாளையம் கிராமத்தில், குமார் என்பவரது கூரை வீடு முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தது. அதேபோல் சித்தாத்தூர் கிராமத்தில் செல்வி என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விருகாவூர் பகுதியில் மக்காச்சோள பயிரில் தேங்கியுள்ள தண்ணீரை வடிகால் அமைத்து விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர். தொடர் மழை பெய்யும் பட்சத்தில் இப்பகுதியில் பயிர்கள் கடும் சேதம் அடையும் சூழல் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி