உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், ராம நவமி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், 60ம் ஆண்டு ராமநவமி வசந்தோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. தினசரி காலை சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, 7:30 மணிக்கு பரனூர் கிருஷ்ணபிரேமியின் குமாரர் ரங்கன்ஜி உபன்யாசம் நடக்கிறது. நேற்று மாலை சுவாமி ஆஞ்சநேயர் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:30 துளசிதாசர் சரித்திரம் உபன்யாசம் நடந்தது. வரும், 30ம் தேதி ராமர் திருக்கல்யாண வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ