ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் இன்று 8ம் தேதி ரேஷன் கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம் நடக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மின்னணு ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம் திருக்கோவிலுார் தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலக பிரிவில் காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், மொபைல் எண் இணைத்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம்.