மேலும் செய்திகள்
என்.எஸ். எஸ்., புத்தாக்க பயிற்சி
17-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், என்.எஸ்.எஸ்., அலுவலர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கி புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொடர்பு அலுவலர் முருகேசன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 45 மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் முகாமில் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட தொடர்பு அலுவலர் வேல்முருகன், பள்ளி சார்பில் தத்தெடுக்கப்படும் கிராமத்திற்கு மாணவர்களை அழைத்து சென்று, 7 நாட்கள் சமூக பணியில் ஈடுபடுத்துதல் குறித்து பயிற்சி அளித்தார். திட்ட அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.
17-Jul-2025