சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சிமணவாளன், சுரேஷ் (பொது விநியோக திட்டம்), விஜயகுமாரி(திருக்கோவிலுார் கூட்டுறவு வங்கி) முன்னிலை வகித்தனர். இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சாந்தி வரவேற்றார்.இதில், கடந்த 2024ம் ஆண்டில் கூட்டுறவு துறையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், பதிவாளரின் சுற்றறிக்கையை நடைமுறைபடுத்துதல், சங்கத்தில் உள்ள கோப்புகளை பராமரிக்கும் விதம், பெறப்படும் புகார் மனுக்களுக்கு பதிலளிக்கும் முறை, கூட்டுறவு சங்கங்களில் தணிக்கை செய்யும் வழிமுறைகள் உட்பட பல்வேறு சார்நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் நிர்மல் நன்றி கூறினார்.