மேலும் செய்திகள்
ஆசிரியர் சங்க கூட்டம்
15-Jun-2025
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது.வட்டார தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் லஷ்மிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆசிரியர் நலன், மாவட்ட தேர்தல் குறித்து பேசினார். செயலாளர் சம்சுதீன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சீனிவாசன், நடராஜன், சாதிக், சாந்தி, முனியப்பிள்ளை, சின்னப்பன், அமலதாஸ், செம்பான், இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் சாஜிதா பேகம் நன்றி கூறினார்.
15-Jun-2025