உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒழுங்குமுறை விற்பனை கூட எடைப்பணி தொழிலாளர் சங்க கூட்டம்

ஒழுங்குமுறை விற்பனை கூட எடைப்பணி தொழிலாளர் சங்க கூட்டம்

திருக்கோவிலுார்; ஒழுங்குமுறை விற்பனை கூட எடைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் அரகண்டநல்லுாரில் போராட்ட விளக்க கூட்டம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனை கூட எடைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், எடைப்பணி தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், காலமுறை ஊதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் நவம்பர் 22ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக பட்டினி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விளக்கக் கூட்டம் அரகண்டநலலுாரில் நடந்தது. சங்கத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கண்ணன், செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போராட்டத்தை விளக்கி பேசினார். ஒழுங்குமுறை விற்பனை கூட எடை பணி தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ