உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏமப்பேர் கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்

ஏமப்பேர் கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்

திருக்கோவிலுார்; புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஏமப்பேர், அருமலை பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அணைக்கரை உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், ஏமப்பேர், அருமலை உள்ளிட்ட பல கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.இவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் 2000 ரூபாய், 5 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி, நிர்வாகி சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ