மேலும் செய்திகள்
சிவாலயங்கள் கோலாகலம்
05-Oct-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சண்டிகேஸ்வரர் புடைப்பு சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கள்ளக் குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் கூறியதாவது: திருக்கோவிலுார், கீழையூர், மாரியம்மன் கோவில் முன்புறத்தில், சாலையோரம் இருக்கும் புடைப்பு சிற்பத்தை பலரும் என்ன சிலை என தெரியாமலேயே வழிபட்டு வந்துள்ளனர். மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், கல்வெட்டு ஆர்வலர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது, 30 அங்குலம் உயரம், 26 அங்குலம் அகலம் கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை என தெரிய வந்தது. புடைப்பு சிற்பமான இதில் விரிசடையுடன் காதுகள் மற்றும் கழுத்திலும் அணிகலன்கள் அழகுற காணப்படுகிறது. சண்டிகேஸ்வரர் சைவ சமயத்தில் பஞ்ச மூர்த்திகளில் ஒருவர். சிவபெருமானின் உணவு மற்றும் உடை ஆகியவற்றின் அதிபதி. சிவாலயங்களில் காவல் தெய்வமாகவும், கணக்கு அதிகாரியாகவும் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
05-Oct-2025