புறவழிச்சாலையில் பள்ளம் தினமலர் செய்தியால் சீரமைப்பு
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருந்த பள்ளம் தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இதில், மாடூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் இருந்தன.இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கும் போது டிரைவர்கள் மற்றும் பயணிகள் அச்சமடைவதுடன், வாகனங்களில் பழுதும் ஏற்பட்டது. இது குறித்து சில தினங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பள்ளங்களில் 'பேட்ஜ்' ஒர்க் மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டது.