மேலும் செய்திகள்
அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை, மொபைல் போன் அபேஸ்
03-Aug-2025
கச்சிராயபாளையம்: மாத்துார் வழியாக எடுத்தவாய்நத்தம் கிராமத்திற்கு பஸ் இயக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு எடுத்தவாய்நத்தம், பரிகம், மாத்துார், மண்மலை, க.செல்லம்பட்டு, கரடிசித்துார், தாவடிப்பட்டு, பால்ராம்பட்டு, மாதவச்சேரி, செம்படாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் தினசரி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை, பரிசோதனை மற்றும் பிரசவத்திற்காகவும், வயது முதிந்தவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான தொடர் சிகிச்சைக்கு வருகின்றனர். கர்பிணிகளுக்கு, செவ்வாய் மற்றும் வியாழன் நாட்களில் மாதாந்திர பரிசோதனை, தைராய்டு, ரத்தசோகை, ரத்த இழுத்தம், சர்க்கரை அளவு, சிசுவின் வளர்ச்சி பரிசோதனை மேற்கொள்கின்றனர். திங்கள், புதன், சனி நாட்களில் முதியவர்களுக்கான சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைக்கான பரிசோதனை செய்து, மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கபடுவதுடன், தினமும் 5 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் நடந்து வருகிறது. குழந்தைகளுக்கன தடுப்பூசிகள் போட்டப்படுகிறது. எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, மத்திய அரசின் உண்டு உறைவிட பள்ளி, 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. மாத்துார், மண்மலை, செல்லம்பட்டு, கரடிசித்துார் உள்ளிட்ட கிராம மக்கள் எடுத்தவாய்நத்தம் செல்ல கச்சிராயபாளையம் சென்று அங்கிருந்து மாற்று பஸ் மூலம் 15 கி.மீ., துாரம் சுற்றி, 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாத்துார் வழியாக எடுத்தவாய்நத்தம் கிராமத்திற்கு பஸ் இயக்கினால் 3 கி.மீ., துாரத்தில் சென்றுவிடலாம். பெரும்பாலான மக்கள் விரைவாக செல்ல மாத்துார் வழியாக நடந்து செல்கின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மழை மற்றும் வெயில் நேரங்களிலும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, பொது மக்களின் நலன் கருதி கச்சிராயபாளையத்திலிருந்து மாத்துார் வழியாக எடுத்தவாய்நத்தம் கிராமத்திற்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Aug-2025