சாலையை சீரமைக்க கோரிக்கை
சங்கராபுரம் : பாலப்பட்டு - பழைய பாலப்பட்டு தார்சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழைய பாலப்பட்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் புது பாலப்பட்டு - பழைய பாலப்பட்டு தார்சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாலையை சீரமைக்க, கடந்த இரு ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சாலையை போர்க்கால அடிப்படையில், சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.