உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மயானம் மற்றும் தரிசு நிலங்களுக்கு பட்டா வழங்குவதை நிறுத்த கோரிக்கை

மயானம் மற்றும் தரிசு நிலங்களுக்கு பட்டா வழங்குவதை நிறுத்த கோரிக்கை

திருக்கோவிலூர்; கூவனூர் கிராமத்தில் உள்ள மயானம் மற்றும் தரிசு நிலங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் அடுத்த கூவனூர் பொதுமக்கள் சார்பில் ராஜ்குமார் உள்ளிட்டோர் சார் ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது. திருக்கோவிலூர் தாலுக்கா, கூவனூர் கிராமத்தில் மயானம் மற்றும் தரிசு நிலங்கள் ஏராளமாக உள்ளது. அதை நில வகை மாற்றம் செய்யக்கூடாது. மேலும் தரிசி நிலங்களை தனி நபர்களுக்கு வருவாய் துறையினர் பட்டா போட்டு கொடுத்துள்ளனர். அதனையும் ரத்து செய்து அரசுக்கு சொந்தமான இடங்களை பள்ளி உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு இடங்களை வருவாய்த்துறையினர் மெய்த்தன்மை சான்றிதழ் வழங்கி தனி நபர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை இனி தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி