உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு

கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.உளுந்துார்பேட்டை தாலுகா பு.மலையனுார் பகுதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு, 50; விவ சாயி. இவர் நேற்று மதியம் ஒரு மணியளவில் மின் மோட்டார் பழுது நீக்குவதற்காக கிணற்றில் கயிறு கட்டி இறங்கி கொண்டு இருந்தார். அப்போது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்து கரையேற முடியாமல் தவித்தார். இவரின் கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதன் பேரில் உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றில் தவித்துக் கொண்டிருந்த சாமிகண்ணுவை உயிருடன் மீட்டனர். பின் அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ