உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வருவாய் துறையினர் தாராளம்: மண் அள்ளும் இடைத்தரகர்கள் குஷி

வருவாய் துறையினர் தாராளம்: மண் அள்ளும் இடைத்தரகர்கள் குஷி

வி வசாயிகள் தங்களது நிலத்தின் வளத்தை மேம்படுத்தி, மண்ணின் தன்மையை சீரமைப்பதற்காக பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. வண்டல் மண்ணில் உள்ள சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. விவசாயிகள் வண்டல் மண் அள்ள சர்வே எண், சிட்டா எண் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து, தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். பொதுவாக ஏரி, குளங்களில் 30 கன மீட்டர், 5 லோடு லாரிகள் (200 கன அடி அளவு) வரை வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். தாசில்தார் ஒப்புதல் கடிதம் கிடைத்ததும் அதை பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்து 'ட்ரிப் ஷீட்' பெற வேண்டும். தொடர்ந்து, நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். பெறப்பட்ட அளவுக்கு மண் எடுக்கிறார்களா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், கிராவல் மண் அள்ளும் இடைத்தரகர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள இடைத்தரகர்கள் தங்களுக்கு தெரிந்த விவசாயிகளின் ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து அதிகாரிகளை கவனித்து மண் அள்ள ஒப்புதல் பெறுகின்றனர். தொடர்ந்து, 'ட்ரிப் ஷீட்' பெறாமல் நீர்நிலைகளுக்கு சென்று கிராவல் மண் அள்ளுகின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் கிராவல் மண்ணை ரியல் எஸ்டேட், செங்கல் சூளை உள்ளிட்ட தொழில் செய்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் கிராவல் மண்ணை அளவுக்கு மீறி அள்ளுகின்றனர். இதனால் நீர்நிலைகளில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. இடைத்தரர்களின் விருப்பத்திற்கேற்ப கிராவல் மண் அள்ள அனுமதி வழங்கும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது பொதுமக்கள், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை