ஊரக வளர்ச்சி ஊராட்சி துறையின் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனவு இல்ல திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், நிறைவேற்றப்பட்ட பணிகளில் நிலுவை பணிகளை விரைவில் முடிக்கவும், புதிய திட்ட பணிகளை விரைவாக தொடங்கவும் அறிவுறுத்தினார். மேலும் வளர்ச்சி திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். நடைபெறும் பணிகளை விரைாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் மற்றும் பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.