உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நீர் நிலைகளில் மெகா சைஸ் பள்ளங்களால் ஆபத்து : சிறுவர்களின் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுமா?

நீர் நிலைகளில் மெகா சைஸ் பள்ளங்களால் ஆபத்து : சிறுவர்களின் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுமா?

கள்ளக்குறிச்சி: வடக்கிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் அணைகள், ஏரிகள், குளம் மற்றும் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்து காணப்படும். மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ் கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள், 335 ஏரிகள் உள்ளன. பஞ்சாயத்திற்குட்பட்டு மொத்தம் 380 ஏரிகள் உள்ளது.நீர் நிலைகள் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருக்கும் போது இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பலர் குளித்து வருகின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் அதிகளவு ஆழம், பாறை இடுக்கு, சேரும் சகதியும் மிகுந்த பகுதியில் குளிக்கும் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்து போகும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. கடந்தாண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் குளித்த சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் சில இளைஞர்கள் உட்பட நீரில் மூழ்கி இறந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. விரைவில் வடக்கிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது. கிராமப் புறங்களில் உள்ள சிறுவர்கள் பலர் நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் பாதுகாப்பற்ற முறையில் குளிக்கின்றனர்.குறிப்பாக பல நீர் நிலைகளில் சகதிகள் அதிக அளவில் நிறைந்து காணப்படும். அதுபோன்ற நீர் நிலைகளில் சிறுவர்கள் உயரமான இடங்களில் இருந்தும், உயர்ந்த மரக்கிளை களிலிருந்தும் தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடி வருகின்றனர். குறிப்பாக 10 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் எந்தவித பாதுகாப்பு இன்றியும் குளிக்கின்றனர். இதனால் சிறுவர்கள் தண்ணீரில் உள்ள சகதிகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனையொட்டி சிறுவர்கள், வாலிபர்கள் நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும் நீச்சல் தெரியாத சிறுவர்கள், வாலிபர்கள் நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்கும் பொருட்டும், பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை