மேலும் செய்திகள்
ரேஷன் கடை கவலைக்கிடம் புதிதாக அமைக்க கோரிக்கை
22-Oct-2024
கள்ளக்குறிச்சி : அகரகோட்டாலத்தில் மாற்று இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.அகரகோட்டாலம் கிராமத்தில் கிழக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை கட்டடம் பழமை வாய்ந்தது என்பதால், புதிதாக கட்டடம் கட்ட 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, புதிய கடை கட்டுவதற்காக, வி.ஏ.ஓ., அலுவலகம் பின்புறம் உள்ள காலி இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கியது.வேறு இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய கட்டடம் உள்ள இடத்திலேயே புதிய ரேஷன் கடையை கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் 70க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சி - பழைய சிறுவங்கூர் சாலையில் நேற்று காலை 9:10 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ரேஷன் கடை கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், பழைய ரேஷன் கடை உள்ள இடத்தை ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் 10:30 மணியளவில் கலைந்து சென்றனர்.
22-Oct-2024