வடபொன்பரப்பியில் சாலை மறியல்
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி ஊராட்சியில் சில தினங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கூறியும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை 6:00 மணியளவில் பஸ் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 7:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.