உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி; தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கண், காது, வாயை மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஸ்வநாதன், மாரிமுத்து, தண்டபாணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சாமிதுரை, நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில துணை தலைவர் செந்தில்முருகன், மாவட்ட தலைவர் பிரபாகரன், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம், வட்ட செயலாளர் குமாரதேவன் சிறப்புரையாற்றினர். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மவுன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை