கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.1.06 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 15 மூட்டை, உளுந்து 8, வேர்க்கடலை 5 மூட்டை என 28 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,860, உளுந்து 4,989, வேர்க்கடலை 7,610 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் நேற்று மொத்தமாக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 162க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் 15 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,985 ரூபாய் என மொத்தம் 29 ஆயிரத்து 775 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் கமிட்டியில் நெல் 87 மூட்டை, கம்பு, மக்காச்சோளம், உளுந்து தலா ஒரு மூட்டை என மொத்தம் 90 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக நெல் 2,200 ரூபாய், கம்பு 3,100, மக்காச்சோளம் 1,800, உளுந்து 5,600 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 419 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.