மேலும் செய்திகள்
5 பேரிடம் ரூ.83 ஆயிரம் 'அபேஸ்'
26-Apr-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பெண்ணிடம், 30 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த பனப்பாடியை சேர்ந்தவர் செல்வி, 47; கடந்த, 7ம் தேதி திருக்கோவிலுார் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். அங்கிருந்த நபர் ஒருவரிடம் கார்டை கொடுத்து இருப்பு தொகையை சரி பார்க்க சொன்னார். தொடர்ந்து அவரிடம் கார்டை திரும்ப பெற்று வீட்டிற்கு சென்றார். மறுநாள் அவரது வங்கி கணக்கில், 30 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து, மர்ம நபர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடியது தெரிந்தது. இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Apr-2025