உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பயணியிடம் ரூ.6.5 லட்சம் அபேஸ்

பயணியிடம் ரூ.6.5 லட்சம் அபேஸ்

உளுந்துார்பேட்டை:சென்னை கொளத்துாரை சேர்ந்தவர் பேச்சிமுத்து, 62; ஆட்டோ டிரைவர். துாத்துக்குடியில் இவரது பூர்வீக நிலத்தை விற்ற பணம், 6.5 லட்சம் ரூபாயுடன், துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் பயணித்தார். நேற்று காலை 4:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் அருகே டீ குடிக்க பஸ் நிறுத்தப்பட்டது. பணம் இருந்த பையை இருக்கையில் வைத்துவிட்டு, பேச்சிமுத்து டீ குடிக்க சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருநாவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை