உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊரக வளர்ச்சி பணிகள்: கலெக்டர் உத்தரவு

ஊரக வளர்ச்சி பணிகள்: கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை திட்ட பணிகளை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி, பேரூராட்சி, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பழங்குடியினர் நலம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஊரக வளர்ச்சி துறையில் மூலம் நடக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அங்கன்வாடி, ரேஷன்கடை கட்டடம், பள்ளி சுற்றுச்சுவர், குடிநீர், சாலை பணி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறியப்பட்டன. தொடர்ந்து, நிலுவைப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !