உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்பனை: 4 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்பனை: 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.அதன்படி நேற்று முன்தினம் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெரிசிறுவத்துார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் பரசுராமன்,52; தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் பரமேஸ்வரன், கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் ராஜா, அகரக்கோட்டாலத்தை சேர்ந்த நாவு மகன் ராமசாமி ஆகிய 4 பேரும் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.தொடர்ந்து, 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களிடமிருந்த 26 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல், பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்