மேலும் செய்திகள்
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
10-Sep-2024
மாணவி மாயம் போலீசில் புகார்
27-Aug-2024
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர், டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கோட்டக்கரை, பொட்டியம் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.அப்போது பொட்டியம் ஆற்றில் மணல் அள்ளிய கோட்டக்கரை ஆண்டியப்பன் மகன் மோகன், 38; மாதவச்சேரி அம்பாயிரம் மகன்கள் அன்பரசன், 27; அறிவரசன், 24; எடுத்தவாய்நத்தம் அப்துல்ரஹீம் மகன் அசாருதீன், 24; வைலாம்பாடி பழனி மகன் இளையராஜா, 24; கச்சிராயபாளையம் கொளஞ்சி மகன் ராஜாதேசிங்கு, 30; உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
10-Sep-2024
27-Aug-2024