உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பல்கலைக்கழக அளவிலான குத்துச்சண்டை சங்கராபுரம் மாணவர் வெற்றி

பல்கலைக்கழக அளவிலான குத்துச்சண்டை சங்கராபுரம் மாணவர் வெற்றி

சங்கராபுரம்: அண்ணாமலை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில், சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர் தங்க பதக்கம் வென்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்து சண்டை போட்டி, கடலுார் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. இதில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர் சக்தி 60-65 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார். போட்டியில் தனக்கு எதிராக போட்டியிட்ட மூன்று வீரர்களையும் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஹரியானாவில் நடக்க இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் சக்தியை சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை