மேலும் செய்திகள்
மாநில அளவிலான சிலம்பம் குளித்தலை மாணவியர் தகுதி
20-May-2025
சங்கராபுரம்; தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சங்கராபுரம் அணி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேஷனல் சிலம்பம் ஸ்கூல் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக, தேசிய அளவிலான சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம் சார்பாக சங்கராபுரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் 16 பேர் பங்கேற்றனர்.ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு தொடும் முறை, வேல் கம்பு என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் சங்கராபுரம் அணியினர், ஒற்றை கம்பு பிரிவுகளில் கலந்துகொண்டு, 8 பேர் முதலிடம், 5 பேர் இரண்டாமிடம், 3 பேர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்றவர்களை ஆசான் சூரியமூர்த்தி, மாவட்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலை கழக தலைவர் சுதாகரன், பயிற்சியாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்தினர்.
20-May-2025