உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய அளவிலான கோ-கோ போட்டி தமிழக அணிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு

தேசிய அளவிலான கோ-கோ போட்டி தமிழக அணிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி: தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோ- கோ போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்பதற்கு மாநில அளவிலான தேர்வு போட்டி நடந்தது. இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவிலான கோ - கோ போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி வளாகத்தில் நடந்தன. இப்போட்டியில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவிகள் அணியினர் பங்கேற்றனர். சி.இ.ஓ., கார்த்திகா அறிவுறுத்தலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலையில் மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் நடந்தன. தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்பதற்கு 12 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், தினகரன், இளையராஜா, சாமிதுரை, பாலமுருகன், பழனிசாமி, பச்சையப்பன், சரவணன், ராஜா ஆகியோர் போட்டிகளை நடத்தி தேர்வு செய்தனர். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் தேசிய அளவிலான கோ - கோ விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கான ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை