உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது. திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில், 'டேலண்ட்ஸ் டே' தலைப்பில், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் பாடல், நடனம், பேச்சு, கலை, விளையாட்டு, தொழில்நுட்பத் திறன்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்தார். தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். விவசாயம், கல்வி, தொழில்நுட்பம் குறித்த பல்வேறு படைப்புகளை மாணவர்கள் காட்சி படுத்தியிருந்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் அதற்கான செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள் மீனாட்சி, ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி