அறிவியல் கண்காட்சி
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பி சர்வோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அறிவியல் சம்பந்தமான உபகரணங்களை பார்வைக்கு வைத்தனர். சிறப்பு விருந்தினராக தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் மூர்த்தி பாராட்டினார். அதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியில் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.