உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயியிடம் ஸ்கூட்டர் மொபைல் திருட்டு

விவசாயியிடம் ஸ்கூட்டர் மொபைல் திருட்டு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே ஸ்கூட்டர் மற்றும் மொபைல்போன் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வரஞ்சரம் அடுத்த குடியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன், 47; விவசாயி. இவர், கடந்த 15ம் தேதி விவசாய பணிக்காக நிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு, தனது ஸ்கூட்டரை நிறுத்தி, அதன் மேல் மொபைல் வைத்திருந்தார். பணி முடிந்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் மற்றும் மொபைல் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை