சாகை வார்த்தல் விழா
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் நடந்த சாகை வார்த்தல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுார் மற்றும் தொழுவந்தாங்கல் பகுதிகளில் உள்ள மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த வாரம், அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் மாலையில், சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இந்த நிலையில், நேற்று மதியம் பொதுமக்கள் ஊர்வலமாக பால் மற்றும் கூழ்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு சாகை ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.