உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு

பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு

கள்ளக்குறிச்சி:பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சின்னசேலம் ஜெயா மஹாலில் நடந்தது. நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி மேம்படுத்துவது குறித்த இந்த கருத்தரங்கு நடந்தது. கள்ளக்குறிச்சி ஆவின் பொது மேலாளர் ஜோஸ்பின்தாஸ் மற்றும் பால்வளம் துணைப்பதிவாளர் ஸ்ரீகலா ஆகியோர் கருத்தரங்கினை துவக்கி வைத்தனர். தலைவாசல் கால்நடை மருத்துவக்கல்லுாரி கால்நடை மருத்துவ வல்லுனர்கள் சுரேஷ், முரளி ஆகியோர் தொழில்நுட்ப விளக்கவுரையாற்றினர். பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர். உதவி பொது மேலாளர்கள் வெங்கடேசன் மற்றும் ராஜ எழில், மேலாளர் தமிழண்ணல், விரிவாக்க அலுவலர்கள், ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை