உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி, ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் இலக்கியம், சமூக கலாசாரம், அரசியல் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் சக்திபிருந்தா வாழ்த்தி பேசினார். மாணவர் சரண் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். சிறப்பு அழைப்பாளர், கடலுார் கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உதவி பேராசிரியர் ரட்சகன், ஆங்கில இலக்கியம் நுால் குறித்தும், சமூக கலாசாரம் மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் கவிதா, சுரேந்திரன், கோவிந்தன், சண்முகசுந்தரம், ேஹமலதா, ரோஷினி, செந்தமிழ், அருண்குமார், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் மணிபாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை