உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கால்வாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கால்வாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

மூங்கில்துறைப்பட்டு: நவ 12 -: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் கழிவுநீர் கால்வாய் உடைந்து தெருவில் பெருக்கெடுத்து ஓடிய கழிவு நீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வழியாக கிராமத்தின் வெளிப்பகுதிக்கு கொண்டு சென்றனர். தற்பொழுது காமராஜ் நகர் பழைய தண்ணீர் டேங்க் தெருவில் கழிவுநீர் கால்வாய் உடைந்ததால் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொதுமக்கள் நலன் கருதி உடைந்த கழிவுநீர் கால்வாய் சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை