மேலும் செய்திகள்
பைக் விபத்து: விவசாயி பலி
13-Jun-2025
சங்கராபுரம் சங்கராபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவர் தினம் விழா கொண்டாடப்பட்டது.சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தேர்வு தலைவர்கள் துரை, சங்கர், முன்னாள் தலைவர்கள் சீனுவாசன், சவுந்தர், மூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துக்கருப்பன், ஜெனார்த்தனன், வெங்கடேசன் ஆகியோர் மருத்துவர்களின் சேவையை வாழ்த்தி பேசி, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். தலைமை மருத்துவர் ராஜ்மோகன் நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கினார். ரோட்டரி பிரகாஷ் நன்றி கூறினார்.
13-Jun-2025