உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மண் கடத்தல்; 2 பேர் மீது வழக்கு

மண் கடத்தல்; 2 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் போலீசாரின் அதிரடி சோதனையில் மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இரண்டு ஜே.சி.பி., மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.திருக்கோவிலுார் பகுதியில் ஏரி மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, வேங்கூர் பெரிய ஏரியில் அரசு அனுமதியின்றி மண் எடுத்த ஜே.சி.பி.,யை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல் அரும்பாக்கம் ஏரியில் மண் எடுத்த ஜே.சி.பி., மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் குமரன், 25; மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த காவேரி, 40; ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை