உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியொட்டி சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பால், தயிர், இளநீர், தேன் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு செல்வ விநாயகருக்கு அபிஷேகம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. கணபதி யாகம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. வெங்கடேச குருக்கள் தலைமையிலான குழுவினர் பூஜை செய்தனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஞானவேல் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி