உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம்

மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலெக்டர் கேக் வெட்டி கொண்டாடி, சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு கேடயம் வழங்கினார்.கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரசாந்த் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டியதுடன், சிறப்பாக சேவை புரிந்த தனியார் தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளி சங்கங்கள் மற்றும் உறுப்பினர்களை பாராட்டி, கேடயம் வழங்கினார்.தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு உபகரணங்கள் வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்தி நீங்கள் வாழ்வில் முன்னேறவேண்டும் எனப் பேசினார்.தொடர்ந்து, நடந்த மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளை கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பார்வையிட்டார்.மாற்றுத்திறனாளி வீராங்கனை யசோதா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி