மேலும் செய்திகள்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
24-Dec-2024
Boxing day டெஸ்ட் Match-லா நடந்த Boxing
26-Dec-2024
திருக்கோவிலூர்: ஆவிகொளப்பாக்கம் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த காட்டுப்பையூர் கால்நடை மருத்துவமனை சார்பில், ஆவிகொளப்பாக்கம் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஹேமா தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார்.கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் லதா முன்னிலை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர் சையத் அஷ்ரப் முகாமில் பங்கேற்ற 200 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசிகளை செலுத்தினார்.கால்நடை உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஏழுமலை முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
24-Dec-2024
26-Dec-2024