சித்தலுார் கோவிலில் சிறப்பு பூஜை
தியாகதுருகம் : சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை மாத துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.தியாகதுருகம் அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை மாத முதல் நாளான பொங்கல் பண்டிகை தினத்தில் மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். குலதெய்வ வழிபாடு செய்வதற்காக வந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசித்தனர்.