உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம், மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல் பாலமேடு புற்று மாரியம்மன் கோவில், தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி