உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வள்ளலார் மன்றத்தில் சிறப்பு வழிபாடு

வள்ளலார் மன்றத்தில் சிறப்பு வழிபாடு

சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆவணி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவிந்தராஜ், அரசம்பட்டு திருவள்ளூர் தமிழ் சங்க தலைவர் சவுந்தராஜன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் தலைவர் நடராஜன் வரவேற்றார். ஆசிரியர் இளையாப்பிள்ளை, ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி முன்னிலையில் அகவல் படித்து உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தலைமையாசிரியர் வெங்கடேசன் சன்மார்கம் என்ற தலைப்பில் பேசினார். ரோட்டரி தேர்வு தலைவர் சங்கர் சார்பில் வள்ளலார் பள்ளிக்கு வலைதள வசதி செய்து கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், படைப்பாளர் சங்க தலைவர் வேலு, இன்னீர்வீல் முன்னாள் தலைவர்கள் தீபாசுகுமார், அகல்யா ரவிச்சந்திரன், கவுரி விஜயகுமார், சரவண தேவி மற்றும் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்னீர் வீல் முன்னாள் தலைவர் மஞ்சுளா கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ