மேலும் செய்திகள்
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
13-Nov-2024
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போட்டிக்கு, மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். 10 முதல் 14 வயதுக்குட்பட்ட மன வளர்ச்சி குன்றிய ஆண் மற்றும் பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல் போட்டி நடத்தப்பட்டது.அதேபோல், 10 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கு ஓட்டப்பந்தயம், உருளைக்கிழங்கு சேகரித்தல் போட்டியும், 17 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் போட்டியும் நடத்தப்பட்டு, வெற்றி வெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.புனித அன்னாள் சிறப்புப்பள்ளி, ஆதி சிறப்புப்பள்ளி, பாடசாலை சிறப்புப்பள்ளி மற்றும் சங்கங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
13-Nov-2024