உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ரமணா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

 ரமணா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

திருக்கோவிலுார்: காட்டுச்செல்லுார் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலை பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், 12ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி நடந்தது. பள்ளி தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கி, விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். மாணவ , மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் சாமிக்கண்ணு வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் பாஸ்கரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்